
அதற்காக நான்கு குழுக்களை உருவாக்கவுள்ளோம்.
- சட்ட ஆலோசனைக் குழு
- இணையதள தொழில்நுட்ப செயல்பாட்டுக் குழு
- சந்தை மேலாண்மைக் குழு
- ஊர்தி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு
இந்த குழுக்களின் மூலமாக மா உலா ஓட்டுனர்களின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களும் தீட்டப்பட்டு அவைகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களும் நன்கொடைவாயிலாக திரட்டி அத்திட்டங்களை செயல்படுத்தப்படும். மேலும் கீழ்காணும் நலத்திட்டங்களையும் மா உலா அறக்கட்டளை செயல்படுத்த தயாராகி வருகிறது.
மா உலா ஓட்டுனர்களுக்கான நலத்திட்டங்கள்
- சட்ட சிக்கல்கள் அனைத்தும் மா உலா சட்ட ஆலோசனை குழுவால் கையாளப்பட்டு தீர்வு காணப்படும்.
- ஓட்டுனர் உரிமம் இல்லாதவருக்கு ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர மா உலா நிர்வாகம் வழிகாட்டுதல் செய்யும்.
- மா உலா ஓட்டுனர்களின் வண்டி காப்பீடு முழுவதும் நிர்வாகமே செலுத்தும்.
- மாதம் ஒரு முறை மா உலா ஓட்டுனர்களின் வண்டி (OIL Service) செய்துதரப்படும்.
- செயலி (APP) அல்லது ரசீது மூலம் வண்டி ஓட்டி எங்கு பழுதானாலும் , பழுதுபார்க்கும் செலவு ( Labour Fee ) மா உலா நிர்வாகம் ஏற்ற்றுக்கொள்ளும்.
- மா உலா திட்டத்தில் இணைந்து ஓட்டுவதற்கான ( Broad, Helmet, ID Card, Uniform etc..) இவையனைத்தும் மா உலா நிர்வாகத்தின் மூலமாக வழுங்கப்படும்.
- வட்டியில்ல கடனுதவி திட்டத்தின் கீழ் மா உலா ஓட்டுனர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
- செயலி(APP) அல்லது(BILL) ரசீது மூலம்மாதம் 2500 கிலோ மீட்டர்களுக்கு மேல் வண்டி ஓட்டும் , ஓட்டுனர்களுக்கு சிறந்த ஓட்டுனர் விருதும் , தொகையும் வழங்கப்படும்.
- மா உலா ஓட்டுனர்கள் இதே துறைசார்ந்து செயலாற்றும் பிற நிறுவனங்களோடு இணைந்துசெயல்பட மா உலா நிர்வாகம் வழிவகை செய்யும்.
- மா உலா ஓட்டுனர்களின் குழந்தைகள்கல்விக் கட்டணச் செலவிற்கு விண்ணப்பித்தால் அவர்கள் மா உலா நிர்வாகத்தால் இயன்ற உதவிகள் செய்யப்படும்.
- மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்பாடுகளும் மா உலா அறக்கட்டளையின் மேற்பார்ப்பிலும், வழிகாட்டுதலிலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.