விரைவாக செல்ல ஒரு எளிய வழி தேடி ஓடும் மக்களுக்காக இந்த மா உலா சேவை தொடங்கியது. விரைவாக சென்றாலும் அதிலும் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு பின் இருக்கையிலிருந்து பயணிப்பவருக்கும் தலைகவசம் அளிக்கும் சிறப்பான சேவை.
எங்கு இருந்து அழைத்தாலும் அந்த இடத்திற்கு சென்று அவர்கள் விரும்பும் நேரத்தில் சரியான சேவையை மா உலா செயல்படுத்தி வருகிறது. விரும்பிய இடத்திலும் விரும்பிய நேரத்திலும் சேவை செய்வதே இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.
எளியவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு எளிமையாக அணுகக்கூடியவர்களை கொண்டு நடத்தப்படும் மா உலா எளியவர்க்கும், வலியவர்க்கும் எளிய உலாவாக அமைகிறது.
அதிக ஊர்தி போக்குவரத்து நிறைந்த சாலைகளில் விரைவாக செல்ல மாற்று போக்குவரத்து இன்றியமையாதவையாக அமைகிறது. அந்த போக்குவரத்து சிக்கலை மாற்று வழி வாயிலாக மாற்றியமைப்பதே இந்த மா உலா சேவை.
இன்றைய அவசர உலகில் விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் அந்த அவசரத்தின் அவசியத்தை உணர்ந்தே மா உலா நிறுவனம் செயலாற்றி வருகிறது.
இரவில் தனிமனிதனாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனை எளிமையான வழியாக மாற்றவே மா உலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு உலா இனிமையான உலாவாக அமைய மா உலாவில் பயணியுங்கள்.
மா உலா நிறுவனம் பல்வேறுபட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து 4 – ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இந்த மா உலா நிறுவனமானது இதுவரை மூன்றரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி அளவிலும் பொருளாதார அளவிலும் சமூகத்தில் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மா உலா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றி வருகிறது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு மாற்றுத்திறனாளிகள் தன்மானத்தோடு வாழ வழிவகுக்கும். ஒரு மாற்றுத்திறனாளி பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்து வாழாமல் தன்மானத்தோடு தன் வாழ்க்கையை வாழ இந்த மா உலா திட்டத்தில் இணைந்து பயணிப்பதே ஆகச் சிறந்த வழியாகும்.
இலவச பதிவுமா உலா கோப்பை 2021, 18-12-2021 அன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்காக நன்கொடையளித்தவர்கள் மற்றும் உழைத்தவர்கள் அனைவருக்கும் மா உலா நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.